பெங்களுர் வலைப்பதிவர்கள் சந்திப்பு

‘பெங்களுரில் வலைப்பதிவர்கள் சந்திப்பு’ – ன்னு சுதர்சன் எழுதி இருந்தார். படிச்ச உடனே ஒரு மெயில தட்டி நானும் வரேன்னு சொல்லிட்டேன்.

ஞாயித்துக்கிழமை காலைல நான் எந்திரிக்கறத பத்தி நல்லாவே தெரிஞ்சு வெச்சிருக்குது எங்க அம்மணி. “விடியறதுக்கு இன்னும் நேரம் இருக்கு புள்ள”-ன்னு சொன்னாலும் கேக்காம காலங்காத்தால 8 மணிக்கே போன் பண்ணி எழுப்பி விட்டிருச்சு. குளிச்சு கிளம்பி லால்பாக் போய் சேரும் போது மணி 10.30 ஆயிட்டுச்சு. மக்கள் எங்க இருக்கீங்கன்னு கேக்கலாம்னு ஐயப்பனுக்கு போன் பண்ணினா ஆளு எடுக்கவே இல்ல. டிராபிக்ல மாட்டிகிட்டாரா இல்ல வீட்டுலயே செல்போன மறந்து வெச்சிட்டு வந்துட்டாரா இல்ல எல்லாரும் செல்போன சைலண்ட் மோட்ல போட்டுட்டு விவாதத்துல இறங்கிட்டாங்களான்னு எனக்கு தெரியல. ஒண்ணு மட்டும் புரிஞ்சுது. வேற யாரு நம்பரும் எங்கிட்ட இல்ல, அவர் தான் என்னோட ஒரே contact. அவர புடிக்க முடியலேன்னா இந்த சந்திப்புல நம்ம அவுட்டு. செரி வந்ததுக்கு லால்பாக் சுத்திப்பார்ப்போம்; அதுக்குள்ள அவரை பிடிக்க முடிஞ்சா சரி, இல்லாட்டி வீட்டுக்கு போயி தூக்கத்த continue பண்ணலாம்னு முடிவு செஞ்சேன். என் நல்ல நேரம் அவரே கொஞ்ச நேரத்துல கூப்பிட்டு சொன்னார்: “Glass House பக்கத்துல எல்லாரும் இருக்காங்க அங்க வந்துடுங்க”. பேசறது போன்லங்கறது கூட நெனப்பு இல்லாம நல்லா மண்டைய ஆட்டிட்டு, லைன கட் பண்ணிட்டு, அங்க போனதுக்கு அப்புறம் தான் ஒறச்சுது – ரெண்டு மூணு தரம், போன்ல பேசி இருந்தாலும் ஆள நேர்ல பார்த்தது இல்ல!

மறுபடியும் போன் பண்ணிணா, லைன் என்கேஜ்ட். என்ன பண்ணலாம்னு திரும்பவும் முழிச்சிட்டு இருந்தப்ப தான் yahoo டீ-ஷர்ட் போட்ட ஒருத்தற பார்த்தேன். ஐயப்பன் அங்க தான வேலை செய்யரார், அவரா இருக்குமோ? அவர் கிட்ட போயி நின்னுகிட்டு சுத்தியும் இருக்கற மரம் செடி எல்லாம் வேடிக்கை பார்த்தேன். “Glass house பக்கத்துல ஒரு பெரிய மரம் இருக்கு, அங்க வாங்க” யாருகிட்டயோ போன்ல சொல்லிட்டு இருந்தார். அவருதான்னு முடிவு பண்ணிட்டேன். எதுக்கும் இருக்கட்டுமேன்னு அவர் பேசி முடிச்ச உடனே ஒரு ரிங் விட்டேன். எடுத்து ஹலோ சொன்னார். அப்ப தான் அப்பாடான்னு ஆச்சு. மரத்தடியில மக்கள் இருந்தாங்க. செட்டில் ஆகி உக்காந்து சும்மா பேசும் போது, சிவகாசில இருந்து வந்ததா சொல்லி திலகபாமாவ கை காட்டின போது தான் யோசிச்சேன், இது எல்லாம் பெரியவங்க கூடுற இடம் போல இருக்கேன்னு. அப்புறமா வரவேற்புரை, தமிழ் வணக்கம் பாட்டு எல்லாம் கேட்ட போது முடிவே பண்ணிட்டேன், இது ஆவறது இல்ல,நம்ம இங்க odd man out தான். கொஞ்ச நேரத்துல டீ குடிக்க போற மாதிரி எஸ்கேப் ஆயிட வேண்டியது தான். அப்புறம் சுயஅறிமுகம் னடந்த போது, born and brought up எல்லாம் தமிழ்நாட்ல தான், but I’m sorry to say this, என்னால ரொம்ப எல்லாம் தமிழ் பேச முடியாதுன்னு பாரதி சொன்னத கேட்டு தான் டீ குடிக்க போற யோசனைய விட்டேன்.

இளவஞ்சி எழுதின நிகழ்ச்சி நிரல படிக்காம வந்தது என் தப்பு. ‘பஞ்சபூதங்கள்’ ரவுண்டு நெறையா பேரு கவிதைகள் படிச்சாங்க. நான் டீசன்டா ஒதுங்கிட்டேன். ஐயப்பனோட வென்பா அந்தாதி மாலை சூப்பர். அடுத்த ரவுண்டு தலைப்பு ‘தேடல்’. இந்த ரவுண்டுல தப்பிக்க முடியல. கவிதை தேவை இல்ல எதாச்சும் பேசலாம்ன்னு சொல்லி என்னயும் மாட்டி விட்டுடாங்க. ஒரு குவாட்டர் அடிச்சாத்தான் நமக்கெல்லாம் பேச்சு வரும்கறது அங்க யாருக்கும் தெரியல. தெளிவா இருந்ததால, ஏதோ உளறி வெச்சேன். இந்த ரவுண்டுல பட்டய கெளப்பினது ஷைலஜாவும், கொங்கு ராசாவும்.

இந்த ரெண்டு ரவுண்டுக்கு நடுவுலயும், அப்புறமும் விவாதங்கள், அலசல்கள், ஆலோசனைகள். எதுக்கோ செல்போன பார்த்தா, மணி 1.30. பசி ஆரம்பிமாயிருச்சு. பொடி நடையா நடந்து பார்க்கிங் போனோம். ஷைலஜா+ஷக்திப்ரபா கை வண்ணத்தில் புளியோதரையும், தயிர் சாதமும். அதோட கேசரி, சிப்ஸ், வடை, சுவீட் எல்லாத்தையும் உள்ள தள்ளின பின்னாடி, திலகபாமாவோட குறும்படம். சூழ்நிலை காரணமா முழுசா பார்க்க முடியல. அடுத்தது ஒரு கேம் விளையாடிட்டு, நன்றியுரை (சோறு போட்டதுக்கு தான்!), விழியனின் புத்தகத்தை அவரோட கையெழுத்தோட வாங்கிகிட்டு, கொஞ்சம் போட்டோ எடுத்துட்டு வண்டிய எடுத்து விர்ர்ர்ர்ர்ர்ர்…

வீட்டுக்கு வந்து யோசிச்சு பார்த்தேன், இன்னைக்கு என்ன எதிர்பார்த்து அங்க போனேன்? என்ன கிடைச்சது?

பெரிய எதிர்பார்ப்பு எல்லாம் இல்ல. கம்பியூட்டர்ல கோடு எழுதி சலிச்ச மக்கள், பிளாக் எழுதறாங்க. போய் ஒரு ஹாய் சொல்லிட்டு வரலாம். அவ்வளவு தான். ஹரி அண்ணா, மகாலிங்கம், திலகபாமா, ஷைலஜா, விபாகை மாதிரி
தமிழ் ஆர்வலர்களை அங்க சந்திச்சது ஒரு இன்ப அதிர்ச்சி தான். நான் 2003ல இருந்து பிளாக் வெச்சு இருந்தாலும், தமிழ்ல ஒண்ணும் பெரிசா எழுதல. இனிமே ஒழுங்கா தமிழ்லயும் கிறுக்க முடிவு பண்ணிட்டேன்.

இதோ என் முதல் பதிப்பு.

Advertisements

13 Responses to “பெங்களுர் வலைப்பதிவர்கள் சந்திப்பு”

 1. விபாகை Says:

  வாழ்த்துக்கள். இன்னும் எழுதுங்கள்.

 2. ராசா (Raasa) Says:

  //கொஞ்ச நேரத்துல டீ குடிக்க போற மாதிரி எஸ்கேப் ஆயிட வேண்டியது தான்.//

  நானும் அதே ஐடியாவுல தாங்க இருந்தேன்.. ‘இதோ வந்திடரேன்’னு சொல்லி எந்திரிச்சேன், பக்கத்துல இருந்த ஆளு விடமாட்டேன்னுட்டாரு..

  //ஒரு குவாட்டர் அடிச்சாத்தான் நமக்கெல்லாம் பேச்சு வரும்கறது அங்க யாருக்கும் தெரியல. // உங்களுக்குமா?

  ஆமா, வீட்டுல வந்துட்டாங்களா?

  //இந்த ரவுண்டுல பட்டய கெளப்பினது ஷைலஜாவும், கொங்கு ராசாவும்.// ஹீ..ஹி.. ‘இதெல்லாம் நோட் பண்ணனும்’..

 3. துளசி கோபால் Says:

  ஏங்க பிரகாஷ்,
  நல்லாத்தானே எழுதறீங்க? அப்புறம் ஏன்…..?

  அடுத்த சந்திப்புலே ‘பட்டை’ யைக் கிளப்பிருவீங்கல்லே?:-))))

 4. Bhars Says:

  வணக்கம் பிரகாஷ்,

  நான் அந்த கூட்டத்துக்கு வந்தது ஒரு தூய்மையான சுயநலத்துலதான் (desperate to make friends here :)) ஆனா என்னாலயும் சில முடிவுகள் மாற்றப்பட்டிருக்குனு தெரிஞ்சிக்கும்போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. தெரிவித்ததற்கு நன்றி.

  Keep writing!

  அன்புடன்,
  பாரதி

 5. Pranni Says:

  @விபாகை: நன்றி

  @ராசா:
  //ஆமா, வீட்டுல வந்துட்டாங்களா?
  இல்லீங்க. அடுத்த வாரம் தான்

  @துளசி கோபால்:
  //அடுத்த சந்திப்புலே ‘பட்டை’ யைக் //கிளப்பிருவீங்கல்லே?:-))))
  பட்டை அடிச்சா எப்போ வேணும்னாலும் ‘பட்டை’ யைக் கிளப்பலாம் 🙂

  @பாரதி:
  என்னோட முடிவ மாத்தவெச்சதுக்கு நான்தாங்க நன்றி சொல்லனும்.
  Thanks 🙂

 6. G.Ragavan Says:

  ஆகா சந்திச்சிட்டாங்கப்பா….சந்திச்சிட்டாங்க.

  அப்போ யாஹூன்னு குதிச்சிக்கிட்டே வந்தாரா ஐயப்பரு?

 7. மனதின் ஓசை Says:

  நன்றாக எழுதுகிறீர்கள்.. தொடர்ந்து எழுதவும்.. வாழ்த்துக்கள்

  (அந்த word verificationa தூக்கிடுங்க)

 8. நாகை சிவா Says:

  //பட்டை அடிச்சா எப்போ வேணும்னாலும் ‘பட்டை’ யைக் கிளப்பலாம் :-)//
  இது மேட்டரு
  :)))) LOL

 9. ILA(a)இளா Says:

  சில பேருக்கு அதிர்ஷ்டம் இல்லாம இருக்கும், நானும் அந்த வகை தான். ஹ்ம்ம் அடுத்தமுறை பார்க்கலாம்

 10. Iyappan Krishnan Says:

  கவலையே படாதீங்க… கூடிய சீக்கிறம் மறுபடி மீட் பண்ணலாம்…

  அன்புடன்
  ஐயப்பன்

  பி.கு : அனானி தான் உள்ளார விடமாட்டேங்குறிய இல்ல.. அப்புறம் என்னத்துக்கு wordverification ? தோக்கிடலாமில்லையா ?

 11. Udhayakumar Says:

  கடைசி நேரத்துல வர முடியாம போய் விட்டது. அடுத்த முறை பார்க்கலாம்..

 12. தம்பி Says:

  வணக்கம் பிரகாஷ்,

  தாராளமா எழுதலாம் நீங்க. நல்லாதாங்க வருது உங்களுக்கு எழுத்து. அப்புறம் ஏன்?
  எழுதுங்க.

  அன்புடன்
  தம்பி.–>

 13. Pranni Says:

  @மனதின் ஓசை, ஐயப்பன்
  இங்க wordpress-ல word verification இல்ல 🙂

  @தம்பி
  நன்றி. இனிமே தமிழ்லயும் நெறய கிறுக்க போறேன்

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s


%d bloggers like this: