Archive for the ‘He – She’ Category

Searching for a house …

July 6, 2007

He and She decided to shift to Coimbatore from Bangalore. He goes to Coimbatore on a weekend searching for a house. He found one and on Sat evening, he calls She to convey the message.

He : Hey She, good news, வீடு பார்த்துடேன்
She: Super. எந்த ஏரியா?
He : பீளமேடு தான். நல்ல வீடு, புடிச்சிருந்தது. உடனே அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துட்டேன்
She: என்னது. நான் பார்க்கவே இல்ல அதுக்குள்ள அட்வான்ஸ் குடுத்திட்டியா?
He : இல்லப்பா, நம்ம ஊரு இப்ப முன்ன மாதிரி இல்ல தெரியுமா? அடுத்தா வாரம் நீ வரதுக்குள்ள யாராச்சும் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிட்டா?
She: அது செரி. பாத்ரூம்ல கீசர் இருக்கு இல்ல?
He : பார்த்த மாதிரி தான் இருந்துச்சு. இருக்கும்பா.
She: என்னடா நீ? இதெல்லாம் கூட ஒழுங்கா பாக்கமாட்டியா? செரி. விண்டோல ஸ்கிரீன் போட ப்ரொவிஷன் இருக்கில்ல?
He : ம்ம்ம்ம். ஓ. இருக்குது. அதெல்லாம் இல்லாமயா?
She: நீ யோசிச்சு பதில் சொல்லறத பார்த்தா, எனக்கு என்னமோ நீ பொய் சொல்லற மாதிரி தெரியுது.
He : சீச்சீ. நிஜமாவே இருந்துச்சுப்பா.
She: பெட்ரூம்ல ஷெல்ப் இருக்கில்ல?
He : இல்லயே. அது இல்லாட்டி என்ன? பீரோ வாங்கிகிட்டா போச்சு.
She: போடா. எனக்கு பீரோ எல்லாம் வேண்டாம். ஹால்லயாவது இருக்கா?
He : ஹால்ல யாராச்சும் ஷெல்ப் வைப்பாங்களா? என்ன பேசற நீ?
She: அப்ப ஒரு ஷெல்ப் கூட இல்லாத வீட்ட பார்த்து அதுக்கு அட்வான்ஸ் வேற குடுத்துட்டு வந்திருக்க?
He : இப்ப அது இல்லாட்டி என்ன? வீடு புடிச்சுது. அட்வான்ஸ் குடுத்துட்டேன்.
She: எனக்கு தெரியாதா? பக்கத்து வீட்டுல பிகர் இருக்கா, அவங்க வீடு இங்க மொட்ட மாடில இருந்து தெரியுதான்னு பார்த்து நல்ல வீடுன்னு முடிவு பண்ணி இருப்ப.
He : அடிக்கள்ளி. கரெக்டா கண்டு புடிச்சிட்டியே. ஹீ ஹீ ஹீ
She: பேச்ச மாத்தாத. உண்மைய சொல்லு. வீட்டுல ஷெல்ப் இருக்கு தானே
He : ஹய்யோ. நிஜமாலுமே அந்த வீட்டுல ஷெல்ப் இல்லமா
She: இல்ல. நீ பொய் சொல்லற. அதெல்லாம் நீ பார்க்காம நீ அட்வான்ஸ் குடுக்க மாட்ட
He : ஷெல்ப் இல்லாதது எல்லாம் எனக்கு பெரிய விசயமா படல
She: நீ சும்மா விளையாடுற. உண்மைய சொல்லு
He : அட இது பொய் இல்ல. நிஜமாலுமே தான்
She: நான் நம்ப மாட்டேன். சொல்லு
He : நான் சொன்னாத்தான் நம்ப மாட்டேங்கறியே. நீ வந்து பார்க்கத்தான போற? அப்ப தெரியும்
She: நீ சொல்லறத பார்த்தா ஷெல்ப் இருக்கு போல
He : இல்லயே
She: போடா. விளையாட்டு போதும். சொல்லு
He : என்ன சொல்ல. அந்த வீட்டுல ஷெல்ப் இல்ல
She: நேர்ல மட்டும் இப்ப இருந்த, விளக்குமாறு தான். டென்ஷன் பண்ணாதடா. பாப்பாக்கு செரிலேக் கலக்க டைம் ஆச்சு. சொல்லு.
He : செரி செரி. உண்மைய சொல்லிடுறேன். பெட்ரூம்ல ஒன்னு, ஹால்ல ஒன்னு மொத்தம் ரெண்டு ஷெல்ப் இருக்கு போதுமா?
She: எனக்கு அப்பவே தெரியும். நீ சும்மா பொய் தான் சொல்லறேன்னு. செரி பாப்பா பசிக்கு சத்தம் போடுறா. bye.
He : bye (sigh)

எங்க சொல்லுங்க பார்க்கலாம். அந்த வீட்டுல ஷெல்ப் இருந்துச்சா இல்லயா?

Advertisements

I’ve decided…

March 27, 2007

Yesterday I was speaking with my friend whose is thinking of getting a new car. He asked me, if I were to buy a car, which car will I decide. Nice question. Me making a decision?

Well, when was the last time I made a decision by myself? I digged into my memories and finally found it out. It was a nice evening and I was in Chennai. I was sitting in the balcony and was thinking “Should I marry or not”. I decided to get married. Thats it. After that I don’t decide much. Initially it was something like this:

He : Wow, what a nice shirt? I’m going to buy that.
She: What? A black shirt. No that will not fit you da. Let us look for something else

Read the “Let us” as “I will”. For the first few times it was little tough. After that I got used to that. Now its more or less like this:

(While driving)
He : Shall I take right and go thru Old Madras Road or turn left and go thru Airport Road
She: Thru Airport Road.

(Over a phone)
He : Hey She. What are you doing?
She: Cooking. Why?
He : illa, I’ve a small doubt. I need to name a variable. Which one sounds better? “isSynchronized” or “isInSync”.
She: Try “isSynced”

See, making decisions is no more my job. Its been delegated to her. Now, my friends ask me about which Car will I decide. Poor bachelor. He doesn’t have the comfort of having someone else do all the thinking and making decision. He has to do it by himself. I pity him.

PS:
In another two days, both chinna ammani and peria ammani are coming. Expect more He-She coming up 😉

bye-bye adolescence

June 20, 2006

She : என்னடா, இன்னைக்கும் ஆபீஸ்ல வேல சீக்கிரம் முடிஞ்சிடுச்சா?
He : ஆமா. ரெண்டு bug என் பேர்ல இருந்துச்சு. அத பிக்ஸ் பண்ணியாச்சு.
She : இப்ப என்ன? லேப்டாப் எடுத்துகிட்டு உக்காந்துக்குவியே?
He : இல்ல புள்ள. வெதர் ரொம்ப நல்லா இருக்கு. மொட்டை மாடிக்கு போய் பாட்டு கேட்க போறேன்

நம்ம ஆளு முகம் கழுவி; தலை சீவி; iPod எடுத்துட்டு மேல போறான்.

She : (மனசுக்குள்) என்னமோ செரியில்லயே. ஆபீஸ்க்கே கலைஞ்ச தலையும், கசங்கின சட்டையுமாத்தான் இவன் போவான். இப்போ என்ன தலை சீவி, அயன் பண்ணி வெச்ச T-shirt-ம்…

5 நிமிசம் கழிச்சி…

He : என்னது?
She : ஏன் முன்ன பின்ன பாத்தது இல்லியாக்கும்? காபி. குடிக்காமயே ஓடி வந்துட்ட, அதான் எடுத்துட்டு வந்தேன்.
He : செரி. அந்த புதுசா கட்டின பக்கத்து அபார்ட்மெண்ட்ல நாலாவது ப்ளாட்ல ஒரு பேமிலி குடி வந்திருக்கு பார்த்தியா?
She : இல்லயே ஏன்?
He : அங்க ஒரு பொண்ணு இருக்கு. ஏதோ எக்ஸாம்க்கு படிக்குது போல. சாயங்காலம் 6 மணியா போதும். டாண்ணு ஒரு புக் எடுத்துட்டு வந்து பால்கனில உக்காந்துக்கும்.
She : ம்ம்ம். நானும் நாலு நாளா எலி ஏன்டா இப்படி ஓடுதேன்னு புரியாம குழம்பிகிட்டு இருந்தேன். ஏன்டா. மனசுல என்ன +2 படிக்கற பையன்னு நெனப்பா? ஏழு கழுத வயசாச்சு, கல்யாணம் வேற முடிஞ்சாச்சு. இப்போ என்ன சைட் வேண்டி கிடக்கு?
He : அம்மணீ, வயசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எத்தன வயசானாலும், இந்த விடலத்தனம் பசங்ச கிட்ட இருக்கதான் செய்யும்.
She : உடனே அம்மணீஈஈஈ-ன்னு கொஞ்சாத. இத இப்ப நிறுத்தப்போறியா இல்லயா?
He : அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : யார?
He : என்னதான் பசங்க விழுந்து, விழுந்து படிச்சு நல்லா எழுதினாலும், எல்லா செமஸ்டர்லயும் பொண்ணுகளுக்குனா ரெண்டு ரெண்டு மார்க் சேத்திப்போட்டாரே அந்த சேகர் சார், அவர நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன். டைடல் புட் கோர்ட்ல லஞ்ச் டைம் போது அந்த 4th floor CTS பொண்ணு போட்டிருக்கற சுரிதார் நல்லா இருக்குன்னு நான் சொன்னப்ப, ‘நீ இன்னும் வளரவேயில்லயாடா’-ன்னு என்னப்பார்த்து கேட்டுட்டு, அடுத்த வாரமே அதே டிசைன்ல சுரிதார் எடுத்து அவன் ஆளுக்கு குடுத்தான் பார் அந்த ரவி கம்மனாட்டி, அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன். இத எல்லாத்தையும் விட சனிகிழமை மாயாஜால்ல மத்தியான ஷோ முடிச்சிட்டு, அங்க எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்தறத பார்த்து வெறுத்து போயி, பின்னாடி கிச்சாவ உக்கார வெச்சு ECR-ல வண்டிய ஓட்டிகிட்டு வரும் போது, ரெண்டு HR பொண்ணுகள வெச்சு டிரிப்பில்ஸ் அடிச்சு போனாம் பார், அந்த பக்கத்து புராஜக்ட் டீம் லீட், அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : போடாங்க… உனக்கு என்ன மனசுல பெரிய கமலஹாசன்னு நெனப்பா? உனக்கு ஒழுங்கா ஒரு … செரி. அத விடு. இப்ப நீ நிறுத்தப்போறியா இல்லயா?
He : அட ஆண்டவா. என்ன தான் வளர்ந்தாலும், சில விசயங்களுக்கு bye-bye சொல்ல முடியாதுன்னு இந்த பொண்ணுகளுக்கு புரிய வைக்க மாட்டியா? அதான் சொன்னனே புள்ள. அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : நான் எதுக்கு அவங்கள நிறுத்தச்சொல்லனும்? நான் நிறுத்த வேண்டியத நிறுத்திக்குறேன். அப்பறம் பார்போம்.
He : ஙே!…

அது ஒண்ணுமில்லீங்க, புலிய பார்த்து பூன சூடு போட்ட கத தான். ஏதோ ஒரு தில்லுல போட்டியில நானும் கலத்துக்கலாம்னு முடிவு பண்ணி என்னால ஆனத எழுதிட்டேன். புடிச்சிருந்தா இங்க வந்து ஒரு ஓட்டு போட்டுருங்க…

Typing in தமிழ்

May 23, 2006

He is a regular reader of this blog and after reading the Tamil LIP for Win XP he decides to install it. After seeing Tamil UI, She is much interested in this.

She : ஹேய், இது சுப்பரா இருக்குதே. எப்படி பண்ணின?
He : மைக்ரோசாப்ட்காரனே இத குடுக்கறான். defaultஆ வராது. நம்ம தனியா இன்ஸ்டால் பண்ணிக்கனும்
She : It looks cool da. தமிழ்ல டைப் பண்ண கூட முடியுமா?
He : இதோ (He நோட்பேட் எடுத்து தமிழில் டைப் செய்கிறான்)
She : எப்படி டைப் பண்ணறது? தமிழ்ல நெறய கேரக்டர்ஸ் இருக்கே. எல்லாமே கீபோர்ட்ல இருக்கா இல்ல a-m-m-a இன்னு டைப் பண்ணினா அது அம்மா-ன்னு translitrate பண்ணிக்குமா?
He :இல்ல. translitrate பண்ணற மாதிரி நெறய சாப்ட்வேர் இருக்கு, ஆனா directa விண்டோஸ்ல டைப் பண்ணறது கொஞ்சம் வித்தியாசமா பண்ணனும்.இப்போ கோ வேணும்னா மொதல்ல க டைப் பண்ணனும் அப்புறம் ஓ டைப் பண்ணனும். க+ஓ=கோ தான?இந்த மாதிரி ம+ஈ=மீ வரும்.
She : நல்லா தான் இருக்கு. ஆனா இப்படி உயிர் எழுத்து மெய் எழுத்து சேர்ந்து டைப் பண்ணினா உயிர்மெய் எழுத்து வரும்னு நமக்கு தெரியும். ஒரு எழுத படிக்க தெரியாதவன் வந்தா அவன் எப்படி டைப் பண்ணுவான்?
He : ஙே!!!

Helping at home

April 30, 2006

She is not feeling well and so He decides to help her in kitchen for the whole of next week. But looks like its a little hard. Look at what happens every evening.

Day 1:
She : போடா. நீ கொஞ்சம் கூட செரி இல்ல?
He : என்ன She? காலைல நான் வீடு கூட்டி விட்டுட்டு தான போனேன்?
She : வீடு கூட்டினா போதுமா? பாத்திரம் எல்லாம் கழுவி வச்சிட்டு போக வேண்டியது தான?
He : செரி, செரி. நாளைக்கு பாத்திரம் எல்லாம் கழுவி வெச்சிட்டு போறேன். போதுமா?

Day 2:

She : போடா. எனக்கு உடம்பு செரி இல்லாதப்ப கூட நீ எனக்கு ஒழுங்காவே help பண்ண மாட்டேங்கற
He : என்ன ஆச்சுமா? நான் தான் காலைல போகும் போது எல்லா பாத்திரத்தயும் கழுவி வெச்சுட்டு தான போனேன்?
She : இல்ல நீ வாஷ் பேசின்ல இருந்தத மட்டும் தான் கழுவின. வெளிய வெச்சு இருந்த அந்த குக்கர் கழுவவே இல்ல
He : செரி, செரி. நாலைக்கு கரெக்டா எல்லா பாத்திரதயும் கழுவிடுறேன். ஓகேவா?
She : பாக்கலாம்

Day 3:

She : போடா. நீயும் உன்னோட ஹெல்ப்பும்
He : என்ன ஆச்சு? குக்கர் கழுவி தான வெச்சிட்டு போனேன்
She : ஆமா. எல்லா பாத்திரதயும் கழுவி எங்க வெச்ச? வாஷ் பேசின் பக்கத்துலயே கழுவின பாத்திரத்த எல்லாம் வெச்சு இருக்க. அதுக்கு அடுத்ததா கழுவின பாத்திரத்துல இருந்து தண்ணி தெரிச்சு எல்லாம் அழுக்கு. நான் மறுபடியும் எல்லா பாத்திரத்தயும் கழுவினேன்
He : செரி, செரி. கழுவின கையோட, பாத்திரத்த எல்லாம் கீழ வெச்சுடுறேன்

Day 4:

She : போடா. நீ ஒரு ஹெல்ப்பும் பண்ண வேண்டாம்.
He : என்ன ஆச்சு She? இன்னைக்கு எல்லா பாத்திரமும் கழுவி கீழ தான வெச்சிட்டு போனேன்?
She : ஆமாம். சும்மா சும்மா பாத்திரம் மட்டும் கழுவி வெச்சிட்டு போனா போதுமா? இது தான் நீ எனக்கு ஹெல்ப் செய்யற லச்சனமா? நானே தான் குக் செஞ்சு சாப்பிடனுமா?
He : செரி, செரி. நான் ஆபிஸுக்கு போகும் போது குக் பண்ணி வெச்சிட்டு போறேன் போதுமா?

Day 5:

She : போடா. நான் தான் மொதல்லயே சொன்னனே. நீ என்ன நல்லாவே பார்த்துக்க மாட்டேன்ங்குற
He : என்னம்மா ஆச்சு? நான் எல்லா வேலையும் செஞ்சு வெச்சுட்டு தான போனேன்?
She : ஆமா. டைய்லீ நீ என்ன விட்டுட்டு ஆபிஸ் போயிடுற. உனக்கு என் மேல அன்பே இல்ல. என்னிக்காச்சும் லீவு போட்டு என்னை பார்த்துகிட்டியா?
He : ஙே!!!!!