Archive for the ‘வெண்பா’ Category

கொஞ்சலும் கெஞ்சலும்

January 29, 2007

பெரிய அம்மணிய அட்ஜஸ்ட் பண்ணறது ஒன்னும் கஷ்டமான விசயம் இல்லைங்க. அவளுக்கு கோவம் வந்ததுன்னாம் “கோவப்படும் போது நீ ரொம்ம அழகா இருக்க தெரியுமா’ அப்படின்னு கத வுட்டு சமாளிச்சிடலாம். ஆனா இந்த சின்ன அம்மணி இருக்காளே, ரொம்ம கஷ்டம்ங்க. அவளுக்கு தோனுனத்தான் செய்வா. ஹூம். அவளக் கொஞ்சினாலும் செரி கெஞ்சினாலும் செரி, ஒன்னும் வேலைக்காகாது. செரி வளவளன்னு ஒளராம வெண்பாக்கு போலாம்.

கண்ணே கனியே அமுதேவென்(று) சொன்னாலும்
நெஞ்சில் குடுப்பாள் உதை

Advertisements

சிரிப்பு …

January 4, 2007

குட்டி பாப்பா வந்ததில இருந்து கவித சும்மா அருவி மாதிரி கொட்டுது. ஆனா எழுதலாம்னு உக்காந்தா, இலக்கணம் அங்க அங்க முட்டுது. ரொம்ப யோசிச்சு நேத்து ராத்திரி ஒன்னு கிறுக்கினேன். இன்னும் ரெண்டு மூணு இருக்கு, நேரம் கிடைக்கும் போது தளை தட்டாம செரியா கிறுக்கி இங்க பதிக்குறேன்.

அவளைக்கொஞ் சும்போது என்மனதை அள்ளும்

நொடியில் மறையும் சிரிப்பு

பிரிவு

October 12, 2006

ஒரு மாசமா டைபாய்டுன்னு சாக்கு சொல்லி, வீட்டுல நல்லா தின்னுட்டு, தூங்கிட்டு இங்க வந்தா ஒரே கடி. இங்க தனியா வேற இருக்கேனா, சண்ட போட கூட ஆளே இல்லாம, நானே சமைச்சு, அத நானே சாப்பிட்டு, ஹூம். என்ன தான் திட்டும், அடியும் வாங்கினாலும், அம்மணி நெனப்பு வுட்டு போக மாட்டேங்குது. இந்த மாதிரி பிரிவில தான் நல்லா கவித வருமாமே. செரி ட்ரை பண்ணிப்பார்போமேன்னு ஒரு வெண்பா எழுதினேன்.

கவித, கவித எங்க படி:

தரையில் ஒருமீனாய் என்னைத் திணறவிட்ட(து)
எங்கள் இருவர் பிரிவு

தமிழ் இனி மெல்லச் சாகும்…

August 22, 2006

பெங்களூர் வலைப்பதிவர்கள் சந்திப்பு பத்தி இங்க எழுதி இருந்தேன். அதுல “என்னால ரொம்ப எல்லாம் தமிழ் பேச முடியாது” -ன்னு அறிமுகப்படுத்திகிட்ட பாரதியோட blog பக்கம் எட்டி பார்த்தேன். ஒரு நிமிசம் ஹார்ட் அட்டாக் வந்திடுச்சு. அசத்தலான குறள் வெண்பா எழுதி வெச்சிருக்காங்க. ரெண்டு சாம்பிள்:

கதவுதிறந் தோடிவந் தென்மழலை சொல்லும்
மொழியின் இனிதோ தமிழ்?

சோர்வாய் படித்து முடித்து உறங்கிடப்
போவோம் விடியும் பொழுது

இதைப்படிச்சதுக்கு அப்புறம் தலைப்புக்கும் இதுக்கும் என்ன சம்மந்தம்னு கேக்கறீங்களா? தமிழுக்கு வந்த போதாத காலம், எனக்கும் குறள் வெண்பா எழுத ஆசை வந்திருச்சு. பாரதி போன ஜென்மத்துல நிறைய புண்ணியம் செஞ்சு இருக்காங்க. இல்லைன்னா என்ன மாதிரி சிஷ்யன் கிடைப்பாங்களா? 😉 கொஞ்சம் பொறுமையா பகுபத உறுப்பிலக்கணத்துல ஆரம்பிச்சு வெண்பா ரூல்ஸ் எல்லாம் சொல்லி கொடுத்தாங்க. நானும் ஏதோ கத்துகிட்டு தமிழை கொலை பண்ணப்போறேன். தமிழ் மேல அதீத பற்று இருக்கறவங்க தயவு செஞ்சு இதோட இந்த blog படிக்கறத நிறுத்திடுங்க. இதோ என்னோட மொத குறள்:

பதிவு எழுதியது போதாதென் றெண்ணி
எழுத நினைத்தேன் குறள்.