Archive for the ‘மரபிலக்கியம்’ Category

காதல்ல சொகம்கறதே…

February 14, 2007

இன்னைக்கு காதலர் தினம். காதலப்பத்தி எதாச்சும் எழுதலாம்னு நெனச்சு உக்காந்தேன். ஒன்னும் தோனல. அம்மணிக்கு போன் போட்டு ‘எதாச்சும் சொல்லு புள்ளே’ன்னு கேட்டேன். அம்மணி பதில்: ‘இங்க உம்பொண்ணு அழுகறத சமாதானப்படுத்தவே நேரம் இல்ல இதுல நீ கிறுக்கறதுக்கு நான் சொல்லிக்கொடுக்கணுமாக்கு. போடா ______ ‘

செரி, இலக்கியத்துலே எதாவது சுட்டு எழுதலாம்னு தேடி நளவெண்பால இத புடிச்சேன். மரபுக்கே உரித்தான அழகான உவமையோட நளன பிரிஞ்ச தமயந்தி சொல்லறது:

செப்பு இளம்கொங்கைமீர்!திங்கள்சுடர்பட்டுக்
கொப்புளம்கொண்ட குளிர்வானை – இப்பொழுது
மீன்பொதித்து நின்ற விசும்பு என்பதென் கொலோ
தேன் பொதிந்த வாயால் தெரிந்து.

விளக்கம்:

செப்பு மாதிரி கொங்கைகள் இருக்கற இளம்பெண்களே, என்னைச்சுடும் இந்த நிலாவின் வெப்பம் பட்டு வானம் முழுவதும் கொப்புளங்கள். இந்த கொப்புளங்களை வின்மீண்கள் என்று உங்கள் தேன் போன்ற வாயிலால் சொல்கின்றீர்களே, இது சரியா?

என்ன தான் சொல்லுங்க. என்ன கேட்டா, காதல்ல சொகம்கறதே இந்த மாதிரி பிரிஞ்சிருக்கறப்ப படற கஷ்டந்தான். என்ன சொல்லறீங்க?

Advertisements

பெண்கள் அகராதி

June 9, 2006

இங்க எதாச்சும் எழுதி ரொம்ப நாளாச்சி. அது ஒண்ணுமில்லீங்க கால் கட்டு போட்டுகிட்டேன். ஆஸ்பித்திரி போய் போடற கட்டு இல்லீங்க. இது வேற கால் கட்டு. ஹீஹீ.

Assembly, C, C++, Java, C# இப்படி என்ன language-ல வேணும்னாலும் program குடுங்க, எவ்வளவு complex-ஆ இருந்தாலும் சும்மா பின்னி எடுத்துடுவேன். ஆனா இந்த பொண்ணுங்க பேசறதுல ஒரு lineக்கு அர்த்தம் கேளுங்க, பேந்த பேந்த முழிப்பேன். அது என்னமோ போங்க, இந்த பொண்ணுங்களுக்கு எதையும் நேரா சொல்ல தெரியாது. எதாச்சும் சொல்லிபுட்டு அப்புறம் அது நமக்கு புரியலைன்னு சொன்னா மொகட்டுலயே ஒரு குத்து வேற. ஒரு பொண்ணு ‘இது’ சொன்னா ‘அது’ அர்த்தம்னு யாராச்சும் பெண்கள் அகராதின்னு ஒண்ணு எழுதினா எவ்வளவு நல்லா இருக்கும்?

கலிங்கத்துப் பரணில செயங்கொண்டார் இத அழகா சொல்லறார்:

‘விடுமின் எங்கள்துகில்! விடுமின்!’ என்று முனி
வெகுளி மென்குதலை ‘துகிலைப்
பிடிமின்’ என்ற பொருள் விளைய நின்றருள்செய்
பெடைந லீர்! கடைகள் திறமினோ!

விளக்கம்:

கணவன் உங்கள் ஆடையை பற்றி இழுக்கையில், விடுங்கள், விடுங்கள் என்று நீங்கள் சொல்லும் வார்த்தைக்கு உண்மையான அர்த்தம், ‘இழுங்கள் இழுங்கள்’ என்பதே. இப்படி பொய்க்கோபம் காட்டும் பெண்களே கதவுகளை திறங்கள்.

இதயே ஷாஜகான் படத்துல, ‘போ, போ, போ என்று சொல்லுக்கு வா, வா, வா என்று அர்த்தமே’-ன்னு ரொம்ப சிம்பிளா ‘மே மாத மேகம்’ பாட்டுல சொல்றாங்க!

மரமும் யானையும்

November 20, 2005

போன வாரம் எங்க டீம்ல பசங்க சேர்ந்து ஆபீசுக்கு பக்கதுல ஒரு கடைல காபி குடிக்க போயிருந்தோம். பக்கதுல ஒரு கடைல ஒரு அழகான வாட்ச் வெச்சு இருந்தாங்க. பீர் பாட்டில் மாதிரி ஒரு ஷேப்ல இருந்துச்சு. பசங்க அதை பார்ததும் இது என்னான்னு தெரியுதான்னு கேட்டாங்க. பீர் பாட்டில்ன்னு சொன்னேன். சிரிச்சுகிட்டே பசங்க சொன்னானுக, ‘எங்களுக்கு அதுல ஒரு வாட்ச் தெரியுது, உனக்கு அங்க ஒரு பீர் பாட்டில் தெரியுது. எல்லாம் பாக்கறவங்க கண்ணை பொறுத்துதான்’. யோசிச்சு பார்த்தா எவ்வளவு சரின்னு புரியுது. நம்ம அத பீர் பாட்டில்ன்னு பார்தா அதுல இருக்கற வாட்சோட அழகு தெரியாது. அத வாட்ச்ன்னு பார்த்தா அதுல இருக்கற பீர் பாட்டில் தெரியாது. இதயே தான் திருமூலர் திருமந்திரம்ல சொல்லறார்:

மரத்தை மறைத்தது மாமத யானை
மரத்தில் மறைந்தது மாமத யானை
பரத்தை மறைத்தது பார்முதல் பூதம்
பரத்தில் மறைந்தது பார்முதல் பூதம்

விளக்கம்:

யானை சிலை ஒண்ணு ரொம்ப தத்ரூபமா மரத்துல செஞ்சு வெச்சிருக்காங்க. அதை மரம்ன்னு பார்த்தா அதுல இருக்குற யானை தெரியாது, அதை யானைன்னு பார்க்கும் போது அதுல மரம் தெரியாது. யானை வேற மரம் வேற இல்ல. ரெண்டும் ஒண்ணுதான்; பார்கறவங்க கண்ணை பொறுத்து தான் எல்லாமே. பஞ்ச பூதங்கலால ஆன இந்த உலகமும், பரமாத்மாவும் அப்படிதான். பார்கறவங்க கண்ணுக்கு எப்படி தெரிந்தாலும் அது ரெண்டும் ஒண்ணு தான்

பீர் பாட்டில் தத்துவம்

September 30, 2005

என்னோட computer வேலை செய்யலை. இப்போ Sree-யோட லாப்டாப்ல type பண்ணறேன். நான் வேற கவிதை எதுவும் post பண்ணாததுக்கு computer வேலை செய்யாதது மட்டும் காரணம் இல்லை, என்னோட சோம்பேரித்தனமும் கூடத்தான். நான் பரவாயில்ல, ஏதோ கொஞ்சம் break விட்டாலும் மறுபடியும் ஆரம்பிச்சுட்டேன். இன்னும் சில பேர் இருக்காங்க, நெறய விசயம் ஆரம்பிப்பாங்க, ஆனா அதுக்கு அப்புறம் அத அப்படியே கிடப்புல போட்டுடுவாங்க. இதை அழகா Beer Bottle Principle அப்படின்னு சொல்லுவாங்க.

அதாவது நல்லா குலுக்கி விட்டு பீர் பாட்டி்ல தொறந்து பாருங்க. சும்மா புஸ்ஸுன்னு
பொங்கி வழியும். எல்லாம் ஒரு ரெண்டு மூணு secondக்கு தான். அப்புறம்
எல்லாம் வடிஞ்சு போயி, ஒண்ணும் இல்லாம அமைதி ஆயிடும். மக்களும் இது மாதிரி தான். தடபுடலா ஆரம்பிச்சுட்டு அப்புறம் அப்படியே விட்டுடுவாங்க. இதை தான் வள்ளுவர் அழகா சொல்லுறார்:

உடைதம் வலியறியதார் ஊக்கத்தின் ஊக்கி
இடைக்கன் முறிந்தார் பலர்

விளக்கம்:
நெறயா பேர் ஒரு விசயத்த ஆரம்பிக்கற்துக்கு முன்னாடி, தன்னால அது முடியுமான்னு யோசிக்காம சும்மா குருட்டு நம்பிக்கைல ஆரம்பிச்சிட்டு, அப்புறம் அந்த விசயத்தை முடிக்காம விட்டுருவாங்க.

மாற்றம்

September 2, 2005

Englishல ஒரு நல்ல பழமொழி இருக்குங்க. ‘Change is the only thing remains constant’ அப்படின்னு. யோசிச்சு பார்த்தா அது எவ்வளவு உண்மைன்னு தெரியும். நம்ம ஒவ்வொருத்தருடைய வாழ்க்கையிலயும் எவ்வளவு மாற்றம்? நான் எல்லாம் சின்ன வயசில படுத்தா போதும், தூக்கம் சொக்கிட்டு வரும். night 9 மணி ஆனா போதும், படுக்க கூட வேண்டாம், அப்படியே தூங்கிடுவேன். இப்போ எல்லாம் அப்படியே opposite. ராத்திரி எப்படியும் படுக்க 1 மணி ஆயிடும். அப்புறம் சூரியன் FM. ‘கேளுங்க, கேளுங்க கேட்டுகிட்டே இருங்க’ தான். தூங்க போக 2/3 மணி ஆயிடும். சாதரண தூக்கத்துக்கே இப்படி ஒரு changeன்னா மத்த விசயத்துல கேட்கவே வேனாம். சின்ன வயசில ஒருத்தன் நடந்துக்கறத வெச்சு, அவன் பெரியவனானதும், இப்படி தான் இருப்பான்னு சொல்லறது கொஞ்சம் கஷ்டம். இல்ல, இல்ல ரொம்பவே கஷ்டம். இத புறநானூறுல ரொம்ப அழகா சொல்லி இருக்காரு, பொன் முடியார்.

பால் கொண்டு மடுப்பவும் உண்ணான் ஆகலின்,
செறாது ஒச்சிய சிறு கோல் அஞ்சியோடு,
உயவொடு வருந்தும் மன்னே! இனியே
புகர் நிறம் கொன்ட களிரு அட்டு ஆனான்,
முன் நால் வீழிந்த உரவொர் மகனே,

உன்னிலன் என்னும், புண் ஒன்ட்று அம்பு –
மான் உலஈ அன்ன குடுமி
தோல் மிசை கிடந்த புல் அணலோணே.

விளக்கம்:
சின்ன வயசுல, பயல் ‘பால குடி’-இன்னு சொன்ன மாட்டேன்னு குறும்பு பண்ணுவான். ஒரு சின்ன குச்சிய காட்டி பயமுறுத்தினாலே பயந்து குடிச்சிடுவான். இப்போ என்னடான்னா, பய சண்டைக்கு போயி யானை எல்லாம் கொன்னுட்டு வாரான். நெஞ்சுல ஒரு அம்பு குத்தி இருக்குடா-ன்னு சொன்னா, ‘ஓ, அம்பா? நான் எதோ சின்ன புண்ணோன்னு நெனச்சு கவனிக்காம விட்டுடேன்’ அப்படிங்கறான்!