Archive for the ‘தமிழ்’ Category

பெப்சி உமா ஆண்ட்டிக்கு ஒரு கேள்வி …

August 21, 2007

பெப்சி உமா : blogன்ற பேர்ல படிச்சவங்க அசிங்கமா விமர்சனம் பண்ணி எழுதறது வெட்கத்துக்குரியது
அப்பாவி ஆறுமுகம் : படிக்காதவங்க எழுதற blog எல்லாம் நீங்க பார்க்கறதே இல்லயா?

😉

லிங்க் உபயம் – கில்லி

Advertisements

புகைப்படப்போட்டிக்காக …

July 26, 2007

நான் ஏற்கனவே இங்க சொன்ன மாதிரி, பொடுசுகள போட்டோ எடுக்கறதுங்கறது ஒரு பெரிய கலைங்க. அந்த போட்டோ எடுக்க கஷ்டப்பட்ட மாதிரி இந்த ரெண்டு போட்டோகளுக்கும் கஷ்டப்படலை. ஏன்னா கையில இருந்தது ராஜாவோட டிஜிட்டல் கேமரா 🙂 சும்மா ஒரு இருவது, முப்பது போட்டோ சுட்டுத்தள்ளுட்டேன். தேறினது என்னவோ இது ரெண்டும் தான்.

எடுத்ததுக்கு அப்புறம், iPhoto வெச்சு கொஞ்சம் டச் பண்ணினேன். ரெண்டுலயும், edge blur effect குடுத்து; மொத போட்டோவ கருப்பு வெள்ளைக்கு மாத்தி; ரெண்டாவதுல கொஞ்சம் color correction பண்ணினா, நான் போட்டிக்கு ரெடி. அப்ப நீங்க?

From புகைப்படப்போட்டி

வழக்கம் போல போட்டோவ கிளிக்கினால் picasa webல பெரிசா பார்க்கலாம். அங்கயே, ரைட் சைடுல டவுன்லோட் லிங்க அமுத்தினா ஒரிஜினல் சைசிலயும் வியூ பண்ணலாம். டமில் வால்க 😉

KPN Travels Vs ABT X Travels

July 19, 2007

ஊரவிட்டு ஊரு வந்து வேலை பாத்து மாசா மாசம் சம்பாதிக்கறதுல ஒரு அமெளண்ட KPNக்கு குடுக்கற கோஷ்டில நானும் ஒருத்தன். யோசிச்சு பாருங்க. ஒரு நாளைக்கு பெங்களூர்ல இருந்து மட்டும் 50 பஸ் வெளிய போகுது. சராசரியா டிக்கெட்டுக்கு 350 ரூவான்னாலும், 50 x 30 x 350 = 5,25,000 டர்ன் ஓவர் வருது. அட ஆமாங்க. சைபர் எல்லாம் சரி பாருங்க. அஞ்சே கால் லட்ச ரூவா. இது பெங்களூர் மட்டும். சென்னை, கோவை, திருநெல்வேலி, நாகர்கோயில், … எல்லாம் கணக்கு பார்த்தா ஒரு நாள் எப்படியும் ஒரு கோடி புரளுது. இப்பயே கண்ணக்கட்டுதே, வாரம், மாசன்னு கணக்கு போட்டா? இத்தன காச வெச்சிகிட்டும் படவா பசங்க மூட்டைப்பூச்சி இருக்கற பஸ்ஸ ஓட்டுறானுக. (பொள்ளாச்சிக்கு இது ஒன்னு தான் வண்டி. வேற வழி இல்லாமத்தான் இதுல போகனும்)

அன்னிக்கு ஒரு நாள் நம்ம பிரண்டு ஒருத்தன் சொன்னான்: “மச்சி, கவுண்டரு இவனுகளுக்கு போட்டியா எறங்கிட்டாருடா, இவனுகளுக்கு இனி ஆப்புதான்”. என்னடா அப்பிடி இதுல ஸ்பெசல்ன்னு கேட்டா, நீயே போய் பார்த்துக்கோன்னுட்டான். கொஞ்ச நாளைக்கு முன்னாடிதான் சான்ஸ் கிடைச்சது. வெப்சைட்லயே புக் பண்ணிட்டேன் (லாகின் எல்லாம் வேண்டியதில்ல). மடிவாலால KPNக்கு எதுத்தாப்புலயே ஆபீசு. AC வெயிட்டிங் ரூம்!!! அடையாரு ஆனந்த பவனே, A2Bன்னு போர்டு போட்டு, கன்னட பாட்டு உள்ள பாடவிட்டிருக்கான், இங்க தமிழ் பாட்டு, தமிழ் காலண்டருல இருந்து தினத்தந்தி வரைக்கும் தமிழ் தான். அப்படியே பேச்சு குடுத்ததுல தெரிஞ்ச விசயம்: எல்லா வண்டியும் இவங்க சொந்த வண்டி தானாம்; எல்லாமே AC வண்டிக; ஒரே மாதிரி seating; வண்டில எல்லாம் ஸ்பீட் கண்ரோல் இருக்கு, 70க்கு மேல போகவே போகாது, …

வண்டி 5 நிமிசம் லேட்டு தான். உள்ள ஏறினா கலக்கல். சீட்டுக்கு பக்கத்துல செல்போன் ஹோல்டர், சார்ஜர் போட்டுக்க ப்ளக்; லெதர் சீட்டு; எல்லாருக்கு வாட்டர் பாட்டில் (இது தெரியாம நான் வேற வாங்கிட்டு போனேன்). டிரைவர் சீட்ல இருந்து சத்தம்:

டேய், தண்ணி எல்லாருக்கு வெச்சாச்சா?
ஆச்சுன்னே
ஐபாட் குடுத்தாச்சா?
இதோ எடுத்தாறன்னே

என்னது ஐபாடா? எல்லாருக்குமா? இப்படி குடுத்தா ABT மட்டுமா, சக்தி பைனான்ஸ்ல இருந்து பன்னாரி அம்மன் சுகர் பேக்டரி வரைக்கும் இழுத்து மூட வேண்டி வருமே. செரி எது எப்படி போனா நமக்கென்ன, எந்த ஐபாட் தர போறானுக? இப்படி ஒரே கன்பீசன்ல இருந்தப்ப தான், கொண்டாந்து குடுத்தாங்க. அது iPod இல்லைங்க, eye-pad! கண்ணுக்கு கட்டிட்டு தூங்கலாம். அவ்வளவு தான். 😦 கூடவே வந்த டிஸ்யூ பேப்பரு ஓவருன்னா, சீட் பெல்ட், வாந்தி எடுக்க சிக்னஸ் பேக், டீவீல ‘ABT உங்களை அன்புடன் வரவேற்கிறது’ எல்லாம் ஓவரோ ஓவரோ ஓவரோ ஓவர். எந்திரிச்சு போய் “இந்த ப்ளைட்ல, சாரி பஸ்ஸுல, டாய்லெட் எங்க இருக்குது?” அப்படின்னு கேக்க தோனுச்சு. அடக்கிகிட்டேன் – கேள்விய.

நண்பு சொன்னா மாதிரி, கவுண்டர் கலக்கிட்டார். ஆனா KPNக்கு ஆப்பு எல்லாம் கிடையாது. ஏன்னா, எத்தன பஸ்ஸு விட்டாலும் அதுல போற மக்கள் ஜாஸ்தி தான்.

மொத்தத்துல:
– ராத்திரில தூங்கனும். படம் போடாதீங்கப்பா
+ மத்த எல்லாமே

டெயில் பீஸ்:
அப்பாவி ஆறுமுகம்: ஏன் எல்லா மப்ஸல் பஸ்லயும் விஜய் படமே போடுறாங்க? நல்ல படமே இவங்களுக்கு கெடக்காதா?

அமெரிக்கால எல்லாம் …

July 16, 2007

நம்ம ஊருல, ரோடுல இருந்து பிட்சா வரைக்கும் எல்லாத்துக்கும் “அமெரிக்கால எல்லாம் “-ன்னு ஆரம்பிச்சு பேசுற கூட்டம் கொஞம் ஜாஸ்தி. அதுலயும் கொஞ்ச நாள் அங்க இருந்துட்டு வந்த ஆளுக அலும்பு தாங்க முடியாது. காபி குடிக்க போனாலும் செரி சத்யம் தியேட்டருக்கு போனாலும் செரி, “இதெல்லாம் என்ன மச்சி, அங்க எல்லாம் …”. இவங்க வெறும் வாய்க்கு அவல் குடுக்கற மாதிரி, நம்ம ஊரு அரசியல்வாதிங்க எல்லாம் காசு குடுத்தா, பொண்டாட்டி புள்ளைகன்னு சொல்லி ஆள் கடத்தற வேலை வேற. ஒடனே, ‘ஹூம், அமெரிக்கால எல்லாம், அரசியல்வாதின்னா எவ்வளவு நேர்மையா இருக்கனும் தெரியுமான்னு’ ஒரு கூட்டம் சொல்லிட்டு திரிஞ்சுது.

இந்த டயலாக்க அடிக்கடி விட்டு கடுப்படிக்கற மக்கள் எல்லாரோட ஈமெயில் ஐடி தேடி புடிச்சி இந்த லின்க நான் அனுப்பிச்சிட்டிருக்கேன். அங்க இருக்குற கருமத்த இங்க எழுத முடியாது, அதனால அங்கயே போய் படிச்சுக்கோங்க. அதோட அந்த டயலாக் உடற ஆளுங்களுக்கு எல்லாம் மறக்காம அந்த லின்க அனுபிச்சு வைங்க.

Searching for a house …

July 6, 2007

He and She decided to shift to Coimbatore from Bangalore. He goes to Coimbatore on a weekend searching for a house. He found one and on Sat evening, he calls She to convey the message.

He : Hey She, good news, வீடு பார்த்துடேன்
She: Super. எந்த ஏரியா?
He : பீளமேடு தான். நல்ல வீடு, புடிச்சிருந்தது. உடனே அட்வான்ஸ் குடுத்துட்டு வந்துட்டேன்
She: என்னது. நான் பார்க்கவே இல்ல அதுக்குள்ள அட்வான்ஸ் குடுத்திட்டியா?
He : இல்லப்பா, நம்ம ஊரு இப்ப முன்ன மாதிரி இல்ல தெரியுமா? அடுத்தா வாரம் நீ வரதுக்குள்ள யாராச்சும் அட்வான்ஸ் குடுத்து புக் பண்ணிட்டா?
She: அது செரி. பாத்ரூம்ல கீசர் இருக்கு இல்ல?
He : பார்த்த மாதிரி தான் இருந்துச்சு. இருக்கும்பா.
She: என்னடா நீ? இதெல்லாம் கூட ஒழுங்கா பாக்கமாட்டியா? செரி. விண்டோல ஸ்கிரீன் போட ப்ரொவிஷன் இருக்கில்ல?
He : ம்ம்ம்ம். ஓ. இருக்குது. அதெல்லாம் இல்லாமயா?
She: நீ யோசிச்சு பதில் சொல்லறத பார்த்தா, எனக்கு என்னமோ நீ பொய் சொல்லற மாதிரி தெரியுது.
He : சீச்சீ. நிஜமாவே இருந்துச்சுப்பா.
She: பெட்ரூம்ல ஷெல்ப் இருக்கில்ல?
He : இல்லயே. அது இல்லாட்டி என்ன? பீரோ வாங்கிகிட்டா போச்சு.
She: போடா. எனக்கு பீரோ எல்லாம் வேண்டாம். ஹால்லயாவது இருக்கா?
He : ஹால்ல யாராச்சும் ஷெல்ப் வைப்பாங்களா? என்ன பேசற நீ?
She: அப்ப ஒரு ஷெல்ப் கூட இல்லாத வீட்ட பார்த்து அதுக்கு அட்வான்ஸ் வேற குடுத்துட்டு வந்திருக்க?
He : இப்ப அது இல்லாட்டி என்ன? வீடு புடிச்சுது. அட்வான்ஸ் குடுத்துட்டேன்.
She: எனக்கு தெரியாதா? பக்கத்து வீட்டுல பிகர் இருக்கா, அவங்க வீடு இங்க மொட்ட மாடில இருந்து தெரியுதான்னு பார்த்து நல்ல வீடுன்னு முடிவு பண்ணி இருப்ப.
He : அடிக்கள்ளி. கரெக்டா கண்டு புடிச்சிட்டியே. ஹீ ஹீ ஹீ
She: பேச்ச மாத்தாத. உண்மைய சொல்லு. வீட்டுல ஷெல்ப் இருக்கு தானே
He : ஹய்யோ. நிஜமாலுமே அந்த வீட்டுல ஷெல்ப் இல்லமா
She: இல்ல. நீ பொய் சொல்லற. அதெல்லாம் நீ பார்க்காம நீ அட்வான்ஸ் குடுக்க மாட்ட
He : ஷெல்ப் இல்லாதது எல்லாம் எனக்கு பெரிய விசயமா படல
She: நீ சும்மா விளையாடுற. உண்மைய சொல்லு
He : அட இது பொய் இல்ல. நிஜமாலுமே தான்
She: நான் நம்ப மாட்டேன். சொல்லு
He : நான் சொன்னாத்தான் நம்ப மாட்டேங்கறியே. நீ வந்து பார்க்கத்தான போற? அப்ப தெரியும்
She: நீ சொல்லறத பார்த்தா ஷெல்ப் இருக்கு போல
He : இல்லயே
She: போடா. விளையாட்டு போதும். சொல்லு
He : என்ன சொல்ல. அந்த வீட்டுல ஷெல்ப் இல்ல
She: நேர்ல மட்டும் இப்ப இருந்த, விளக்குமாறு தான். டென்ஷன் பண்ணாதடா. பாப்பாக்கு செரிலேக் கலக்க டைம் ஆச்சு. சொல்லு.
He : செரி செரி. உண்மைய சொல்லிடுறேன். பெட்ரூம்ல ஒன்னு, ஹால்ல ஒன்னு மொத்தம் ரெண்டு ஷெல்ப் இருக்கு போதுமா?
She: எனக்கு அப்பவே தெரியும். நீ சும்மா பொய் தான் சொல்லறேன்னு. செரி பாப்பா பசிக்கு சத்தம் போடுறா. bye.
He : bye (sigh)

எங்க சொல்லுங்க பார்க்கலாம். அந்த வீட்டுல ஷெல்ப் இருந்துச்சா இல்லயா?