bye-bye adolescence

She : என்னடா, இன்னைக்கும் ஆபீஸ்ல வேல சீக்கிரம் முடிஞ்சிடுச்சா?
He : ஆமா. ரெண்டு bug என் பேர்ல இருந்துச்சு. அத பிக்ஸ் பண்ணியாச்சு.
She : இப்ப என்ன? லேப்டாப் எடுத்துகிட்டு உக்காந்துக்குவியே?
He : இல்ல புள்ள. வெதர் ரொம்ப நல்லா இருக்கு. மொட்டை மாடிக்கு போய் பாட்டு கேட்க போறேன்

நம்ம ஆளு முகம் கழுவி; தலை சீவி; iPod எடுத்துட்டு மேல போறான்.

She : (மனசுக்குள்) என்னமோ செரியில்லயே. ஆபீஸ்க்கே கலைஞ்ச தலையும், கசங்கின சட்டையுமாத்தான் இவன் போவான். இப்போ என்ன தலை சீவி, அயன் பண்ணி வெச்ச T-shirt-ம்…

5 நிமிசம் கழிச்சி…

He : என்னது?
She : ஏன் முன்ன பின்ன பாத்தது இல்லியாக்கும்? காபி. குடிக்காமயே ஓடி வந்துட்ட, அதான் எடுத்துட்டு வந்தேன்.
He : செரி. அந்த புதுசா கட்டின பக்கத்து அபார்ட்மெண்ட்ல நாலாவது ப்ளாட்ல ஒரு பேமிலி குடி வந்திருக்கு பார்த்தியா?
She : இல்லயே ஏன்?
He : அங்க ஒரு பொண்ணு இருக்கு. ஏதோ எக்ஸாம்க்கு படிக்குது போல. சாயங்காலம் 6 மணியா போதும். டாண்ணு ஒரு புக் எடுத்துட்டு வந்து பால்கனில உக்காந்துக்கும்.
She : ம்ம்ம். நானும் நாலு நாளா எலி ஏன்டா இப்படி ஓடுதேன்னு புரியாம குழம்பிகிட்டு இருந்தேன். ஏன்டா. மனசுல என்ன +2 படிக்கற பையன்னு நெனப்பா? ஏழு கழுத வயசாச்சு, கல்யாணம் வேற முடிஞ்சாச்சு. இப்போ என்ன சைட் வேண்டி கிடக்கு?
He : அம்மணீ, வயசுக்கும் இதுக்கும் என்ன சம்பந்தம்? எத்தன வயசானாலும், இந்த விடலத்தனம் பசங்ச கிட்ட இருக்கதான் செய்யும்.
She : உடனே அம்மணீஈஈஈ-ன்னு கொஞ்சாத. இத இப்ப நிறுத்தப்போறியா இல்லயா?
He : அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : யார?
He : என்னதான் பசங்க விழுந்து, விழுந்து படிச்சு நல்லா எழுதினாலும், எல்லா செமஸ்டர்லயும் பொண்ணுகளுக்குனா ரெண்டு ரெண்டு மார்க் சேத்திப்போட்டாரே அந்த சேகர் சார், அவர நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன். டைடல் புட் கோர்ட்ல லஞ்ச் டைம் போது அந்த 4th floor CTS பொண்ணு போட்டிருக்கற சுரிதார் நல்லா இருக்குன்னு நான் சொன்னப்ப, ‘நீ இன்னும் வளரவேயில்லயாடா’-ன்னு என்னப்பார்த்து கேட்டுட்டு, அடுத்த வாரமே அதே டிசைன்ல சுரிதார் எடுத்து அவன் ஆளுக்கு குடுத்தான் பார் அந்த ரவி கம்மனாட்டி, அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன். இத எல்லாத்தையும் விட சனிகிழமை மாயாஜால்ல மத்தியான ஷோ முடிச்சிட்டு, அங்க எல்லாரும் ஜோடி ஜோடியா சுத்தறத பார்த்து வெறுத்து போயி, பின்னாடி கிச்சாவ உக்கார வெச்சு ECR-ல வண்டிய ஓட்டிகிட்டு வரும் போது, ரெண்டு HR பொண்ணுகள வெச்சு டிரிப்பில்ஸ் அடிச்சு போனாம் பார், அந்த பக்கத்து புராஜக்ட் டீம் லீட், அவன நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : போடாங்க… உனக்கு என்ன மனசுல பெரிய கமலஹாசன்னு நெனப்பா? உனக்கு ஒழுங்கா ஒரு … செரி. அத விடு. இப்ப நீ நிறுத்தப்போறியா இல்லயா?
He : அட ஆண்டவா. என்ன தான் வளர்ந்தாலும், சில விசயங்களுக்கு bye-bye சொல்ல முடியாதுன்னு இந்த பொண்ணுகளுக்கு புரிய வைக்க மாட்டியா? அதான் சொன்னனே புள்ள. அவங்கள நிறுத்தச்சொல்லு நான் நிறுத்தறேன்.
She : நான் எதுக்கு அவங்கள நிறுத்தச்சொல்லனும்? நான் நிறுத்த வேண்டியத நிறுத்திக்குறேன். அப்பறம் பார்போம்.
He : ஙே!…

அது ஒண்ணுமில்லீங்க, புலிய பார்த்து பூன சூடு போட்ட கத தான். ஏதோ ஒரு தில்லுல போட்டியில நானும் கலத்துக்கலாம்னு முடிவு பண்ணி என்னால ஆனத எழுதிட்டேன். புடிச்சிருந்தா இங்க வந்து ஒரு ஓட்டு போட்டுருங்க…

Advertisements

6 Responses to “bye-bye adolescence”

 1. யாத்திரீகன் Says:

  has come fine.. but He’s dialogue has been pretty longer i guess 😦

 2. Pranni Says:

  @யாத்திரீகன்
  He வந்து கொஞ்சம் லொடலொட type – என்ன மாதிரி 😉

 3. யாத்திரீகன் Says:

  நானும் இருக்குற கொஞ்ச நஞ்ச மூளைய கசக்கி, மற்ற எந்த படைப்புகளோட சாயல் வரகூடாதுனு எழுதி பதிஞ்சப்புறம் பார்த்தா போட்டி முடிஞ்சிருச்சு..

  உங்களுக்கு வெற்றி பெற வாழ்த்துக்கள் !!!

  அப்படியே கொஞ்சம் நம்ம பக்கம் வந்து எப்படி இருக்குனு சொன்ன உதவியா இருக்கும்….

 4. tamilatamila Says:

  நல்லா இருக்கு,வெற்றி பெற வாழ்த்துக்கள் .

 5. Pranni Says:

  @tamilatamila நன்றி.

 6. Yadhvi Says:

  Grrr…Inniku dhaan paathen!!

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out / Change )

Connecting to %s


%d bloggers like this: