இனியவை கூறல்

‘மாங்கா அடிக்கறது’ – இதுக்கு இப்ப அர்த்தமே வேற. சின்ன வயசுல நிஜமான மாங்கா அடிக்கற வேலை செஞ்சு இருக்கோம். என்ன பக்கத்து தோப்புல போயி செய்யறதுனால, அந்த தோப்புக்கு சொந்தகாரன் அத ‘திருட்டு’ அப்படின்னு சொல்லுவான். யாரு என்ன சொன்னா நமக்கு என்ன? நாங்க பசங்க gang சேந்து போயி கல் எடுத்து வீசி மாங்கா அடிப்போம். அதுல பாருங்க நாங்க ஒன்னும் John De Rhodes இல்லயே, குறி பார்த்து correcta அடிக்க. நல்ல பழமா தான் try பண்ணுவோம். ஆனா கல்லு குறி தவறி பக்கத்துல நல்லா கசக்கற காய் மேல பட்டுடும். அது கீழ விழுந்தாலும் மறுபடியும், மறுபடியும் try பண்ணி கடைசியில அந்த பழத்த அடிச்சி கீழ விழ வெச்சிடுவோம். அப்புறம் காவல்காரன் கிட்ட மாட்டிக்காம எடுத்துகிட்டு ஒடுறது எல்லாம் தனி கதை. கவனிக்க வேண்டிய விசயம் என்னான்னா, எவ்வளவு காய் கீழ விழுந்தாலும், தேடி பிடிச்சு அந்த பழத்ததான் எடுக்குறோம். அதான taste? அது போல தாங்க நம்ம பேசுற வார்த்தையும். நல்ல வார்த்தையும் இருக்கும், கெட்ட வார்த்தையும் இருக்கும். நல்ல வார்த்தைகளை விட்டுடு கெட்ட வார்த்தை பேசுறது அந்த sweetana பழத்த விட்டுட்டு, புளிக்கற மாங்காய சாப்பிடுற மாதிரி.

இதை தான் நம்ம வள்ளுவரு சொல்லாரு:

இனிய உளவாக இன்னாத கூறல்
கனி யிருப்ப காய் கவர்ந்தட்று

இனிமே ரோட்ல போகும் போது எவனாவது ஒருத்தன் குறுக்க வந்தா “போடாங்ங்ங்க …” அப்படின்னு ஆரம்பிக்கறதுக்கு முன்னாடி இதை ஒரு நிமிசம் யோசிசு பாருங்க.

Advertisements

2 Responses to “இனியவை கூறல்”

  1. தேசாந்திரி Says:

    நல்ல முயற்சி. நன்றாக எழுதியிருக்கிறீர்கள். தொடருங்கள்.

  2. Pranni Says:

    நன்றி தேசாந்திரி.–>

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google+ photo

You are commenting using your Google+ account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

w

Connecting to %s


%d bloggers like this: